top of page
ABOUT
 

          1.11.2017 அன்று Aakkan Networks என்ற Youtube Channel தொடங்கப்பட்டு TNPSC, SSC, RRB, IBPS, TNUSRB, TNTET போன்ற போட்டித் தேர்வுகளுக்கு ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக காணொளி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். 200க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகள் சார்ந்த VIDEOக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பணம் செலுத்தி பயிற்சி மையங்களுக்குச் சென்று பயில முடியாத ஏழை எளிய மாணவர்களும் போட்டித் தேர்வில் வென்று வாழ்வில் உன்னத நிலையை அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு இன்றுவரை Aakkan Network செயல்பட்டு வருகிறது..

 

           மத்திய அரசு பணிகளில்  பெரும்பாலும் வட இந்திய மாணவர்களே வெற்றி பெற்று வருகின்றனர்.  இந்த வேறுபாட்டை களைந்து தமிழக மாணவர்களும் மத்திய அரசு பணியில் சேரவேண்டும் என்பதற்காக தமிழ் மற்றும் ஆங்கில பதிப்பில் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த சேவை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

 

          போட்டித் தேர்வுகளுக்கு தேவையான மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து மாணவர்கள் மேலும் பயனடைவதற்காக Aakkan Network  குழுமத்தினால் உருவாக்கப்பட்டதே இந்த www.aakkannetworks.com  என்ற இணையதளம். இந்த இணையதளம் மூலம் மின் புத்தகங்கள் மட்டுமின்றி நடப்பு நிகழ்வுகள்,  மாதிரி தேர்வுகள், வழிகாட்டி பயிற்சிகள் போன்றவை அனைத்து மாணவர்களையும் சென்றடையும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

எச்சரிக்கை

 

1. கட்டணம் பெற்றுக்கொண்டோ இலவசமாகவோ  தமிழகத்தில் எந்த ஒரு மாவட்டத்திலும் பயிற்சி மையம் நடத்தப்படவில்லை என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

2.  கீழ்கண்ட முகவரியில் உள்ள Facebook, Twitter  கணக்குகளை மட்டுமே நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.  இதை தவிர மற்ற போலி கணக்குகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்கும்படி   அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

Aakkan Network  பெயர்க் காரணம்

 

        ஆக்கன்  என்பது ஆங்கில பெயர் அல்ல. ஆக்கம் என்பது மருவி ஆக்கன் என மாறியுள்ளது.

 

ஆக்கன் - ஆக்குபவன் - உருவாக்குபவன் - அரசு அதிகாரிகளை உருவாக்குபவன்

 

என பொருள்படும் வகையில் தாய்மொழி தமிழில் பெயர் அமைக்கப்பட்டுள்ளது.

Aakkan Networks

  • YouTube Social  Icon
  • Facebook Social Icon
  • Twitter Social Icon
bottom of page