
இந்திய ரயில்வே வாரியத்தால் 2018-19 ம் ஆண்டில் ALP / Technician பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை தேர்வுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
21.1.2019, 22.1.2019, 23.1.2019, 8.2.2019 ஆகிய தேதிகளில் இரண்டாம் நிலை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப 1:8 என்ற விகிதத்தில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் 6097 மாணவர்கள் மூன்றாம் நிலைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மூன்றாம் நிலைத் தேர்வில் 5 பகுதிகளாக கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தது 42 மதிப்பெண்கள் பெற வேண்டும். மூன்றாம் நிலைத் தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் கண்டிப்பாக தங்களின் கண்களை மருத்துவரிடம் பரிசோதித்து சான்றிதழ் பெற வேண்டும். சான்றிதழானது அறிக்கையில் குறிப்பிட்ட படிவத்தில் உள்ளவாறு பெற வேண்டும். சான்றிதழை மூன்றாம் நிலை தேர்வுக்கு செல்லும் போது கண்டிப்பாக உடன் கொண்டு செல்ல வேண்டும். தவறும் பட்சத்தில் கண்டிப்பாக தேர்விற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். மூன்றாம் நிலைத் தேர்வு முடிந்ததும் இறுதி முடிவு மே மாதத்தில் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாம் நிலை தேர்வானது 16.4.2019 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Shortlisted Candidates for CBAT http://www.rrbchennai.gov.in/downloads/candidates-shortlisted-comp-based-aptitude-test.pdf
Score Card http://rrbalp.digialm.com/EForms/configuredHtml/1907/57281/login.html
Cut off http://www.rrbchennai.gov.in/downloads/cutoff-marks-2stage-cbt-computer-based-aptitude-test.pdf
Official Website link (Southern Region) http://www.rrbchennai.gov.in/
Comments